கிண்ணியா மண்ணின் முதலாவது குறுந்திரைப்படம் "மாற்றம்" வெளிடப்பட்டுள்ளது!
கிண்ணியா மண்ணின் முதலாவது "குறுந்திரைப்படம்" வெளியிடப்பட்டுள்ளது. ஏறத்தாள இருபது நிமிடங்கள் தொடரும் இக்குறுந்திரைப்படத்திற்கு "மாற்றம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. KINNIYA MOTION PICTURES நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படைப்பு எம் இளைஞர்களின் முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் உறவுகள் முக்கியம் எனும் கருப்பொருளில் ஒரு அண்ணன் - தம்பி இடையிலான உறவையும் அவர்களின் மனம் மாறும் விதத்தினையும் காட்டும் இக்குறுந்திரைப்படத்தில் ஒலி, ஒளி அமைப்புக்களில் குறைபாடுகள் இருக்கின்ற போதிலும், முதல் முயற்சி என்ற அடிப்படையில் பாராட்டத்தக்கது.
இவர்களின் அடுத்து வரும் படைப்புக்கள் தரமானதாகவும், சமுதாயத்தில் புதிய மாற்றங்களை உண்டு பண்ணும் விதத்திலும் அமையவேண்டுவதோடு, தொடர்ந்து முயற்சிக்க வாழ்த்துகிறோம்.
.
" மாற்றம் " குருந்திரைப்படத்தை கீழே பார்க்கலாம்.
..