தொழிநுட்பம்

                   புதுக்கம்ப்யூட்டர் வாங்கலாமா!!!!!




பண்டிகைக்காலம் தொடங்கி போய்க்கொண்டிருக்கிறது. பண்டிகை என்றால் புதிய துணிகள், வீட்டிற்கான புதிய சாதனங்கள் என்று பட்ஜெட் போட்டு செலவழிக்கிறோம். டிவி, பிரிட்ஜ், அடுப்பு, வாஷிங் மெஷின் எனப் பழையனவற்றை மாற்றிவிட்டு புதியனவற்றை வாங்கி நிறுவுகிறோம். இவற்றில் இப்போது சேர்ந்துள்ளது பெர்சனல் கம்ப்யூட்டரும். ஆம், டிவியைக் கூட அப்புறம் மாற்றிக் கொள்ளலாம்; இந்த பழைய கம்ப்யூட்டரை மாற்றிக் கொடுத்தால் தான், நாங்கள் மற்றவர்களைப் போல நன்றாகப் படிக்க முடியும் என்று வளர்ந்த பிள்ளைகள் சொல்லும் காலம் உருவாகிவிட்டது. அது மட்டுமின்றி, கேம்ஸ், வீடியோ, திரைப்படங்கள் பார்க்க என கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் தளங்களும் மாறி, வீட்டில் உள்ள அனைவரும் கம்ப்யூட்டரைத் தேடும் நிலை உருவாகி உள்ளது. இந்த நேரத்தில் புதியதாகக் கம்ப்யூட்டர் வாங்கச் செல்கையில் என்ன என்ன பார்க்க வேண்டும் என்று பார்ப்போமா!

முதலில் நிறுவனங்கள் விற்பனை செய்திடும் (எச்.சி.எல்., எச்.பி., டெல், ஐ.பி.எம்., விப்ரோ போன்றவை) கம்ப்யூட்டர்களை வாங்கலாமா? அல்லது தெரிந்த கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் நண்பர்கள் அசெம்பிள் செய்து தரும் அசெம்பிள்டு கம்ப்யூட்டர் வாங்கலாமா? இந்த கேள்வி தான் முதலில் நம் முன் நிற்கிறது. நிறுவனங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்கள், அசெம்பிள்டு கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் கொண்டிருக்கின்ற முதல் ப்ளஸ் பாய்ண்ட், அவற்றிற்கான சர்வீஸ் நெட்வொர்க். நீங்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் அல்லது அவர்களின் அதிகாரம் பெற்ற மையம் அந்த ஊரிலோ அல்லது அருகில் உள்ள நகரத்திலோ இருக்கும். ஆனால் அசெம்பிள்டு கம்ப்யூட்டர் வழங்கிய நபர் இந்த பொறுப்பினை எடுத்துக் கொள்ளமாட்டார்.
நிறுவனங்கள் ஒரு முழுமையான கம்ப்யூட்டரை, அனைத்து உறுப்புகளும் இணைந்து மொத்தமாக, தருகின்றன. இதனால் அசெம்பிள்டு கம்ப்யூட்டரைக் காட்டிலும் இதற்கு அதிக மதிப்பு எப்போதும் உண்டு.

அசெம்பிள்டு கம்ப்யூட்டரில், நிறுவனக் கம்ப்யூட்டரில் இல்லாத ஒரு வசதி உண்டு. திறன் கூடிய செயல்பாட்டிற்காக, எந்த ஒரு துணைச் சாதனத்தையும் அல்லது சிஸ்டம் சாதனத்தையும் மாற்றிப் பயன்படுத்தலாம். எந்த நேரத்திலும் எதனையும் மேம்பாட்டுடன் கிடைக்கும் சாதனத்தைக் கொண்டு ஈடு செய்திடலாம். ஆனால் நிறுவனங்கள் வழங்கும் கம்ப்யூட்டர்களில் இந்த மாற்றத்தினை மேற்கொள்ள முடியாது.
ஒரு டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டரில் இப்போது தொடக்கநிலையில் என்ன என்ன திறன் கொண்ட உறுப்புகளை இணைக்கிறீர்கள் என்று சென்னை எச்.சி.எல்.நிறுவனத்தை அணுகிய போது அவர்கள் கீழ்க்காணும் குறிப்புகளைத் தந்தனர்.
Intel Core 2 Duo E7500 CPU (2.93 GHz, 3 MB Cache, 1066 FSB)
2 GB DDR2 800 MHz RAM
160GB SATA Hard Disk Drive
16x DVD Writer
19″ TFT Wide Monitor
104 Keys Keyboard
2 Button Optical Mouse with pad
300Watts Speaker and hands free mic
Windows Vista Home (Preloaded) with Recovery CD Media  License
Antivirus (Preloaded) with 1 year license
மேலும் குறிப்பிடுகையில், இவை நாங்கள் பரிந்துரைப்பது என்றாலும் வாடிக்கையாளர்கள் இவற்றில் சற்று மேம்பாட்டுடன் உள்ளவற்றையே விரும்புகின்றனர். அவர்கள் விருப்பத்திற் கேற்ப ஆர்டர்கள் எடுத்தும் தருகின்றோம் என சென்னை அலுவலக உயர் அதிகாரி கூறினார்.
ப்ராசசர் மற்றும் மதர்போர்டு என எடுத்துக் கொண்டால், இரண்டு நிறுவனங்கள் இப்போது சந்தையில் இயங்குகின்றன. இன்டெல் இப்போது அதன் Core 2 Duo range ப்ராசசரை வெகு வேகமாக முன்னிலைப் படுத்தி வருகிறது. அடுத்த நிறுவனமான ஏ.எம்.டி. நிறுவனம் தருவது அதன் Phenom II ப்ராசசர் ஆகும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவகையில் லேட்டஸ்ட் ப்ராசசர் கொள்வதே சிறந்தது. முடியவில்லை என்றால் ஏ.எம்.டி. வழங்கும் AMD X 2 ப்ராசசரைப் பெறலாம். இதே விலையில் கிடைக்கும் பென்டியம் டி (கஞுணtடிதட் ஈ) ப்ராசசரைக் காட்டிலும் சிறப்பாகவே இயங்குகின்றன.

அதே போல எண்ணிக்கையில் அதிக யு.எஸ்.பி. போர்ட்களைக் கொண்ட மதர்போர்டுக்குச் செல்லவும். மேலும் அதில் டெடிகேட்டட் கிராபிக்ஸ் கார்ட் இணைக்கக் குறைந்தது ஒரு கஇடூஞுது ஸ்லாட்,ஹார்ட் டிஸ்க் டிரைவ்களை இணைக்கப் போதுமான குஅகூஅ போர்ட்ஸ் ஆகியவை இருக்க வேண்டும். பெரும்பாலான மதர்போர்டுகள் இப்போது 7 சேனல் ஆடியோவுடன் கிடைப்பதால், இது ஒன்றும் பிரச்சினையாக இருக்காது.
ராம் மெமரியைப் பொறுத்தவரை 2 ஜிபி கட்டாயம் இருக்க வேண்டும். மிகப் பெரிய அளவிலான கேம் மற்றும் கிராபிக்ஸ் பயன்படுத்துவதாக இருந்தால் 4 ஜிபி ராம் தேவை. இதில் டி.டி.ஆர். 2 அல்லது டி.டி.ஆர். 3 ஆகியவற்றில் எது வேண்டும் என முடிவு செய்திடலாம். இப்போது இவற்றின் விலை குறைந்திருந்தாலும், இவற்றிற்கு இடையே விலை வேறுபாடு இன்னும் 100% ஆகத்தான் உள்ளது. டி.டி.ஆர்.3 ராம் உள்ள மதர்போர்டுகள் விலை சற்று அதிகமாகவே உள்ளன. எனவே இதன் விலை குறையும் வரை டி.டி.ஆர். 2 ராம் மெமரி சிப் உள்ளவற்றையே வாங்கலாம்.

மானிட்டர்
மானிட்டர் திரையைப் பொறுத்தவரை இப்போது மிக அகலமான எல்.சி.டி. திரைகள் கொண்ட மானிட்டர்கள் கிடைக்கின்றன. கம்ப்யூட்டரில் நீங்கள் பார்க்கும் வேலையின் தன்மை மற்றும் தேவையின் அடிப்படையில் 17 அங்குலம் முதல் 30 வரையில் உள்ள இவற்றிலிருந்து ஏதேனும் ஒன்றைப் பெறலாம். குறைந்தது 19அங்குல அகல மானிட்டர் வாங்குவது நல்லது.
மற்றவை:
ஹார்ட் டிரைவ் டிஸ்க்குகள் விலை மிகவும் குறைவாக உள்ளதால் 320 ஜிபி ஹார்ட் டிரைவ் SATA II வாங்குவது உத்தமம். ஆப்டிகல் டிரைவ் பொறுத்தவரை, இனி வருங்காலங்களில் புளு ரே டிரைவ்தான் பிரபலமாகும். ஆனால் இன்றைய நிலையில் இவற்றின் விலை மிக அதிகமாக உள்ளதால், டிவிடி டிரைவ் கொண்டதே வாங்கவும்.
கேபினட் மற்றும் பவர் சப்ளை யூனிட்:
இவற்றைப் பொறுத்தவரை நிறுவனங்கள் தங்கள் இமேஜைக் காப்பாற்றிக் கொள்ளவும், தனித்தன்மையைக் காட்டவும் சிறப்பான கேபினட்டையும்,பவர் சப்ளை யூனிட்டையும் தருகின்றனர்.

மவுஸ் மற்றும் கீ போர்டு:
கம்ப்யூட்டர் பயன்பாட்டில், பயன்படுத்துவதால் விரைவில் சேதம் அடையும் இரு சாதனங்கள் கீ போர்டும் மவுஸும் ஆகும். எனவே நல்ல ஒரு நிறுவனத்தின் மவுஸ்தான் வேண்டும் எனக் கேட்டு வாங்கவும்.லாஜிடெக், மைக்ரோசாப்ட், ஐ பால், ஜீனியஸ், இன்டெக்ஸ் மற்றும் சாம்சங் எனப் புகழ் பெற்ற பல நிறுவனங்களின் தயாரிப்புகள் சிறப்பு பெற்றவையாக உள்ளன. சில நிறுவனங்கள் இந்த நிறுவனங்களிடம் பெற்று தங்கள் நிறுவனங்களின் பெயரைப் பொறித்துத் தருகின்றன. அவர்களிடமே நீங்கள் தரும் சாதனங்களைத் தயாரித்த நிறுவனங்கள் எவை என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்







  ஒக்டோபர் 26ஆம் திகதி வெளியாகிறது விண்டோஸ் 8




அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளம் பொதுமக்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன்
 ஒப்பந்தம் மேற்கொண்டு கணணிகளைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், தங்கள் கணணிகளில் இதனை பதிந்தே விற்கும். எனவே ஒரு விண்டோஸ் 8 சிஸ்டம் காப்பி, அது பதியப்படும் மதர் போர்டுடன் மட்டுமே செயல்படும்.

அதனை மற்ற மதர்போர்டு உள்ள கணணிக்கு மாற்ற முடியாது. எனவே இன்னொரு புதிய பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற வேண்டும் என எண்ணினால், புதிய விண்டோஸ் 8 ஒன்று வாங்க வேண்டியதிருக்கும்.

ஏற்கனவே உள்ள இயங்குதளங்களை, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திட விரும்புபவர்களுக்கு, அதற்கான கட்டணமாக 40 டொலர் செலுத்திய பின்னர் உரிமம் வழங்கப்படும். மூன்று வாரங்களுக்கு முன்னர், ஒக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என நாள் குறிக்காமல், மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது.

இப்போது சரியாக என்று கிடைக்கும் என தன் திட்டத்தினை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, விண்டோஸ் 8 இயங்குதளம் அதன் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தினை உண்டாக்கப் போகிறது.

முதல் முறையாக இரு வேறு வகை கணணி சாதனங்களில் இயங்கும் வகையில் ஓர் இயங்குதளத்தினை மைக்ரோசாப்ட் வழங்க இருக்கிறது.

டெஸ்க்டாப் மற்றும் டேப்ள்ட் பிசி மட்டுமின்றி, விண்டோஸ் போனிலும் இது இயங்கும். மைக்ரோசாப்ட் அறிவித்த சர்பேஸ் டேப்ளட் பிசியும் இதனுடன் சேர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

2011ஆம் ஆண்டில் நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான கண்காட்சியில், விண்டோஸ் 8 குறித்த திட்டவரைவை மைக்ரோசாப்ட் வெளியிட்டது.

சிப் ஒன்றில் இது சிஸ்டமாகக் கிடைக்கும் எனக் கூறிய போது, அனைவரும் கவனிக்கத் தொடங்கினர். அடுத்து ஜூன் 1, 2011 அன்று கம்ப்யூட்டக்ஸ் 2011ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.

அன்று அறிவிக்கப்பட்ட விண்டோஸ் மெட்ரோ இன்டர்பேஸ், மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது. அதே நேரத்தில் பழையவகை விண்டோஸ் திரையும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் காட்டிலும் அதிவேகமாக விண்டோஸ் 8 பூட் ஆகும், யு.எஸ்.பி. 3 கிடைக்கும், விண்டோஸ் ஸ்டோருக்கான இணைப்பு தரப்படும்.

யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் இயக்கலாம் என்ற புதிய தகவல்கள் கணணி பயன்படுத்துபவர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன

Nokia Phone இனை Format செய்யும் வழிமுறை




நம்முடைய Phone இற்கு வைரஸ் தாக்கினால், பல வகையான பிரச்சினைகளை நாம் எதிர்வு கொள்ள வேண்டியிருக்கும்.குறிப்பாக சொல்லப்போனால்,
  
01.Phone நம்முடைய கட்டளைக்கு எதிர்மாறாக செயற்பட தொடங்கும்.

02.Phone இல் பதிந்து வைத்திருக்கும் சில அப்ளிகேசன் இயங்க மறுக்கும்.

03.SMS இனை பெறவும் முடியாது அனுப்பவும் முடியாத நிலை ஏற்படும்.

04.வழமைக்கு மாறாக Phone லோடாக தொடங்கும்,

05.அடிக்கடி Phone OFF ஆகி ON ஆகும்
 
இது போன்ற பல பிரச்சினைகள் ஏற்படத்தொடங்கும்.இதற்கு Factory settings இனை Reset செய்தாலும் சரி ஆக மாட்டாது.அப்படி என்றால் என்ன செய்வது?உங்களுடைய Phone இனை Format செய்வதை தவிர வேறு எந்த வழியும் இல்லை!

எச்சரிக்கை!இதை செய்வதனால் உங்களுடைய Phone இல் உள்ள Contacts, message, Applications போன்ற அனைத்தும் அழியும்.என்பதை தயவு செய்து கவணத்தில் கொள்ளவும்.


Nokia Phone இனை Format செய்வதற்கு 2 முறைகள் உள்ளது.அதில் எது உங்களுக்கு இலகுவாக தென்படுகிறோதோ அதை, தேவை ஏற்படும் போது மாத்திரம் செய்து பார்க்கவும் (அடிக்கடி செய்து பார்க்க வேண்டாம்)
 
முறை 01


01.உங்களுடைய Phone இனை Switch OFF செய்து கொள்ளுங்கள்.

02.* , 3 மற்றும் Call Key இனை ஒரே நேரத்தில் அழுத்திக்கொண்டு, Phone இனை ON பன்னுங்கள் (சிறிது நேரத்திற்கு அப்படியே Key களை அழுத்திக்கொண்டு இருங்கள்.விடவேண்டாம்)

03.உங்களுடைய Phone Format செய்யப்படும் காத்திருக்கவும்.

04.முடிந்த பின் பாருங்கள்,எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உங்களுடைய Phone இயங்கிக்கொண்டிருக்கும்.

மேலே சொன்ன முறை உங்களுக்கு கடிணமாக இருந்தால் அல்லது உங்களுடைய Nokia Phone இற்கு மேலே சொன்ன முறை பொருந்தவில்லை என்றால் அல்லது உங்களிடம் இருப்பது  Nokia வின் Touch Phone என்றால் (nokia 5800 xpressmusic) இந்த முறையை பயன்படுத்திக்கொள்ளவும்.

முறை 02

01.*#7370# என்ற குறியீட்டை டைப்செய்யுங்கள்

02.அடுத்து Restore all original phone settings? phone will restart.என்ற செய்தி வரும் அதற்கு Yes கொடுங்கள்

03. உங்களுடைய Phone இன் security code கேட்கும், சரியாக கொடுங்கள் , சிறிது நேரத்தில்  Format ஆகிவிடும்.



















Zip, RAR கோப்புகளை தரவிறக்கம் செய்யாமலேயே கண்டறிவதற்கு 


பெரும்பாலான நேரங்களில் வைரசானது சுருக்கப்பட்ட கோப்பின் வடிவங்களாக  Zip, RAR வழியே இலகுவாக கணணியில் நுழைந்து விட வாய்ப்புள்ளது.
இதற்கு காரணம் அந்த மறைக்கப்பட்ட கோப்பினுள் இருக்கும்  கோப்பை நாம் காண முடியாததே. இதனை தவிர்க்க பயர்பொக்ஸ் உலவியில் உள்ள இந்த நீட்சியை பயன்படுத்தலாம்.
இதன் மூலம் Zip, RAR கோப்பினுள் இருக்கும் கோப்புகளை தரவிறக்கும் முன்பே கண்டறிந்து தேவையானால் மட்டும் தரவிறக்கிக் கொள்ளலாம்.
மேலும் ஓன்லைனில் இருந்த படி  Zip, RAR கோப்பினை தரவிறக்கம் செய்யாமலேயே நேரடியாக சோதித்து அறியலாம்.















பார்மெட் செய்வதற்கு முன்னால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள உங்கள் பைல்களை பேக்கப் ( காப்பி ) எடுப்பது எப்படி ? 

உங்கள் கம்ப்யூட்டரை நீங்களோ அல்லது மற்றவரிடமோ கொடுத்து பார்மெட் செய்து புதிதாக விண்டோ எக்ஸ்பி இன்ஸ்டால் செய்ய நீங்கள் நினைக்கும்பொழுது முதல் வேலையாக உங்கள் Personal Documents அனைத்தையும் Backup ( காப்பி ) செய்து ஒரு பென் டிரைவிலோ அல்லது ஹார் டிஸ்கிலோ நீங்கள் ஏற்ற நினைக்கிறீர்கள். ஆனால் அதை எப்படி செய்வது என்று தெரியவில்லையா ? 
 Start > All Programs > Accessories > System Tools > Backup என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் தட்டில் Next ஐ அழுத்துங்கள்.

அடுத்து வரும் தட்டில் Next ஐ அழுத்துங்கள்.
அடுத்து வரும் இந்த தட்டில் My Documents and Settings என்ற இடம் செலெக்ட் ஆகி இருக்கும். இதில் உங்கள் My Documents ல் உள்ள அனைத்தும் மற்றும் இண்டெர் நெட் Favorites, Desktop ல் உள்ள பைல்கள் மற்றும் Cookies போன்றவை காப்பி ஆகும். இவை அனைத்தும் உங்கள் யூசரில் உள்ள டாக்குமெண்டுகள் மட்டும். ஆனால் அனைத்து யூசரின் டாக்குமெண்டும் காப்பி ஆக வேண்டுமென்றால் அடுத்த ஆப்சனை செலெக்ட் செய்துகொள்ளுங்கள். அல்லது கம்ப்யூட்டரில் உள்ளை அனைத்து ஒட்டுமொத்தமாக காப்பி ஆகவேண்டுமென்றால் மூன்றாவதாக உள்ள All information on this computer என்ற ஆப்சனை செல்ட்க் செய்துகொள்ளுங்கள். அல்லது ஒரு குறிப்பிட்ட போல்டரை மட்டும் காப்பி செய்யவேண்டும் என்றால் இறுதியாக உள்ள ஆப்சனை தேர்ந்தெடுத்து உங்களுக்கு தேவையான போல்டரை செல்ட்க் செய்துகொள்ளுங்கள்.
அடுத்து Next ஐ அழுத்துங்கள்…
இப்பொழுது நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இணைத்துள்ள பென் டிரைவ் அல்லது ஹார்டிஸ்க் எதுவோ அதன் ஆப்சன் செல்ட்க் ஆகும். அடுத்து Next ஐ அழுத்துங்கள்.

உடனே உங்கள் Personal Documents அனைத்தும் நீங்கள் இனைத்துள்ள பென் டிரைவில் காப்பி ஆகும்.

காப்பி ஆகி முடிந்ததும் Finish என்ற பட்டனை அழுத்தி மூடிவிடுங்கள்.


இனி உங்கள் கம்ப்யூட்டர் பார்மெட் மற்றும் இன்ஸ்டால் முடிந்த பிறகு மேலே சொன்ன முறைப்படி மறுபடியும் Backup ஆப்சனுக்கு சென்று Restores Fils and Settings என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து Next ஐ அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரின் My Document ஐ தேர்ந்தெடுத்து உங்கள் File களை மறுபடியும் Restore செய்து பயன்படுத்தலாம்.



























                
உங்கள் சுவாசம் மூலம் கைப்பேசியைச் சார்ஜ் செய்யலாம்







மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பொருளாக வலம் வந்து கொண்டிருக்கும் கைப்பேசியைச் சார்ச் செய்வதற்கு நவீன இலத்திரனியற் கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது முகத்தில் அணியக்கூடியதும், நாம் சுவாசிக்கும் போது அந்த சுவாசத்தை மின்சக்கதியாக மாற்றுவதுமான உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாம் விழித்திருக்கும் போதும் தூங்கும் போதும் கைப்பேசியைச் சார்ச் செய்ய முடியும் என்பது விஷேட அம்சமாகும்.
பிரேசிலைச் சேர்ந்த ஜோகோ பவுலோ லமோக்லியா என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த உபகரணமானது கடுமையான வேலைகளை செய்யும் போது அதிகளவு மின்சக்தியை வெளிவிடவல்லது.
அத்துடன் வாரத்தில் ஏழுநாட்களும் 24 மணி நேரமும் இதனை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 15ம் திகதியிலிருந்து சந்தைக்கு வரும் இந்த உபகர 60 தொடக்கம் 70 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






























தகவல்களை ஒழுங்கான முறையில் வகைப்படுத்துவதற்கு
Microsoft Office word-ல் தகவல்களை முறைப்படுத்தி தருவதற்கு பல்வேறு வடிவங்கள் உள்ளன. மேலும் இந்த தகவல்கள் அனைத்து ஒரு Table-ஆக அமையப் பெற்றால், இன்னும் தெளிவான முறையில் அனைவருக்கும் புரியும்.
பட்டியல் அமைக்கப்பட்ட பின்னர் அவற்றை அப்படியே Table-ஆக மாற்ற முடியும். இதற்கான எளிய வழிகளை Microsoft Office word கொண்டுள்ளது.
1. முதலில் மாற்ற வேண்டிய பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து Tables group-ல் உள்ள Table ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
4. இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில் Convert Text To Table என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால்,
1. Table மெனு சென்று, அதில் Convert என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
2. பின்னர் கிடைக்கும் துணை மெனுவில் Text To Table என்பதில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து ஓகே கிளிக் செய்திட, பட்டியலில் உள்ள தகவல்களுக்கு ஏற்றபடி  Table அமைக்கப்பட்டு கிடைக்கும்.
பெரும்பாலான நேரங்களில் நாம் எதிர்பார்த்த வகையில், Table-கள் இருக்காது. எனவே சில சிறிய மாற்றங்களை அகலத்தை அதிகப்படுத்துவது, உயரத்தைக் குறைப்பது போன்றவற்றை ஏற்படுத்தலாம். இதற்கு Table Menu-ல் கொடுக்கப்பட்டுள்ள Table Template-களைப் பெற்று நமக்குப் பிடித்தமான Table Format-ஐ தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
Table வேண்டாம் என எந்த கணத்தில் முடிவு செய்தாலும், Table Menu சென்று Convert To Text தேர்ந்தெடுக்க Table மீண்டும் Text-ஆக அமைக்கப்படும்