2012ம் ஆண்டிற்கான cricket T20 world cupயிற்கான அணிகளின் விபரம்
T20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்கான டிக்கட்டுக்களை பெற கீழே சொடுக்குங்கள் இலங்கையில் சாதிக்க ஆர்வம் காட்டும் இங்கிலாந்து வீரர்கள் | ||||||||||||||||||||
இங்கிலாந்து அணி - ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வைத்து பாகிஸ்தான் அணியிடம் கண்ட படுதோல்வியை அடுத்து இம்முறை இங்கிலாந்து அணி சிறப்பாகச் செயற்பட வேண்டும் என அன்டி பிளவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வைத்து பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாது இங்கிலாந்து அணி தடுமாறியிருந்தது.
தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளாத அணி என்ற விமர்சனத்தை மேற்படி தொடர் கிளறிவிட்டிருந்தது. உலகின் முதற்தர அணியாக இங்கிலாந்து அணி காணப்படுகின்ற போதிலும், உப கண்ட ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடி நிரூபித்தால் மாத்திரமே இங்கிலாந்து உண்மையான முதற்தர அணியாக ஏற்றுக் கொள்ளப்படும் என விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள, அவற்றை பொய்யாக்க இந்த இலங்கைத் தொடர் வாய்ப்பாக அமையும் என அன்டி பிளவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு இறுதியில் இந்தியாவுக்கான சுற்றுலாவும் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைத் தொடரை விமர்சனங்களுக்கு பதிலளிக்கப் பயன்படுத்தலாம் என இங்கிலாந்துப் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பெருமளவிலான இங்கிலாந்து வீரர்கள் இன்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில், சில வீரர்கள் மார்ச் 5ஆம் திகதி முதல் இலங்கையில் காணப்படுகின்றனர். துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் கிரஹாம் கூச் உடன் இணைந்து அவ்வீரர்கள் துடுப்பாட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதோடு, இலங்கையில் காலநிலைகளுக்கும் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்
