Thursday, April 12, 2012

பாரிய அளவில் சுனாமி ஏற்படாததற்கு காரணம் என்ன? ஆய்வாளர்கள் விளக்கம்

இந்தோனேஷியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் வாபஸ் பெறப்பட்டது.
இந்தோனேசியாவின் அசே அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது பாறைத் தட்டுக்களை செங்குத்தாக, அதாவது மேலிருந்து கீழாக அசைக்கவில்லை. மாறாக, பக்கவாட்டில்தான் அது ஏற்பட்டுள்ளது. இதனால்தான் சுனாமி பேரலைகள் ஏற்படாமல் பூமி தப்பியுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட இந்தோனேசிய நிலநடுக்கத்தின் அளவானது 9 ரிக்டராகும். அப்போது ஏற்பட்ட சுனாமி பேரலைகள் இந்தியப் பெருங்கடல் நாடுகளை பெருமளவில் சுருட்டிப் போட்டு விட்டது. பல லட்சம் உயிர்கள் பலியாகின, பெரும் பொருட் சேதத்தையும் ஆசிய நாடுகள் சந்தித்தன.
நேற்று இந்தோனேஷியக் கடலில் அடுத்தடுத்து இரு பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
முதலில் 8.7 ரிக்டர் அளவிலும் பின்னர், 8.3 ரிக்டர் என்ற அளவிலும் பெரும் பூகம்பங்கள் ஏற்பட்டன. ஆனாலும் ஒரு சுனாமி அலை கூட எழவில்லை. இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மிக மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டும் கூட சுனாமி வராதது குறித்து விஞ்ஞானிகள் விளக்குகையில், நிலநடுக்கமானது செங்குத்தாக, அதாவது மேலிருந்து கீழாக பாறைத் தட்டுக்களை நகர்த்த வேண்டும்.
அப்போதுதான் கடல் நீர் வெளித் தள்ளப்பட்டு சுனாமி பேரலைகள் ஏற்படும். ஆனால் பக்கவாட்டில் தட்டுக்கள் நகர்ந்தால் அதனால் சுனாமி அலைகள் ஏற்படாது. நேற்றும் கூட பக்கவாட்டில்தான் தட்டுக்கள் நகர்ந்துள்ளன. இதனால்தான் சுனாமி வரவில்லை.
ஒருவேளை செங்குத்தாக பாறைகள் நகர்ந்திருந்தால் மிகப் பெரிய சேதத்தை ஆசிய நாடுகள் சந்தித்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Wednesday, April 4, 2012

சீனாவை தாக்க அவுஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்கா

னாவை தாக்குவதற்காக அவுஸ்திரேலியாவில் முதன் முறையாக அமெரிக்கா படையினர் முகாமிட்டுள்ளனர்.அவுஸ்திரேலியாவின் வடபகுதி துறைமுகமான டார்வின் நகருக்கு வருகை புரிந்த 200 அமெரிக்க வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்தாண்டு மேற்கொண்ட பயணத்தின் போது, ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி முதல்கட்டமாக வடக்கு அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டுள்ளன.
அமெரிக்கப் படைகளை வரவேற்றுப் பேசிய அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், அமெரிக்கப் படையின் வருகை உற்சாகமளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவுஸ்திரேலியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்ரி ப்ளீச், ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உருவாக்க அமெரிக்கா தொடர்ந்து பாடுபடும் என்றார்.
சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றும் இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் மற்றும் திமோர் கடற்பரப்பை எளிதில் எட்டக் கூடியவகையில் டார்வின் துறைமுகம் அமைந்திருப்பது சிறப்புக்குரியது என்றும் அவர் கூறினார்.
தற்போது 200 அமெரிக்க கடற்படையினர் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளனர். இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2017-ம் ஆண்டில் 2500 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
வியட்நாம் போருக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய முதலாவது இராணுவ நடவடிக்கை இது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது டார்வின் துறைமுகத்தில் அமெரிக்காவின் போர்க் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதால், இதன் மூலம் இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் மற்றும் திமோர் கடற்பரப்பை எளிதில் அமெரிக்க போர்க் கப்பல் சென்றடையும்.
டார்வின் துறைமுகத்தைத் தொடர்ந்து அடுத்து கோக்கோஸ் மற்றும் கிறிஸ்துமஸ் தீவுகளிலும் டேரா அடிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக சீனாவை அடுத்த கட்டமாக நெருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
தென்னாசிய பிராந்தியத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய மூன்று பெரிய நாடுகள் ஓரணியில் நிற்கின்றன. மேலும் வியட்நாமும் இந்தியாவுடன் இணைந்துள்ளது, மியான்மரும் அமெரிக்காவின் பேச்சைத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இலங்கையும்கூட 2006-ல் அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தப் படி போர் ஒன்று நிகழ்ந்தால் அது அமெரிக்கா பக்கம்தான் நிற்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டிருக்கிறது.
எனவே மற்ற நாடுகளுடன் இணைந்து சீனாவுக்கு குடைச்சலை ஏற்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tuesday, April 3, 2012

சூழல் மாசாக்கமும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களும்

ion
01. சூழல் பற்றிய அறிமுகம்:
மனிதனைச் சுற்றயுள்ள இயற்கையின் மொத்த அம்சங்கள் ‘சூழல்” எனலாம். நாள்தோறும் நாம் காண்கின்ற எம்மைச் சுற்றியுள்ள சகல அம்சங்களையும் சூழல் என்பது குறித்து நிற்கும். அந்தவகையில் ‘சூழல்” என்பது உயிர்வாழும் அங்கிகளுக்கு (ORGANISISMS) இடையில் காணப்படும் நிலைமைகளின் மொத்த கூட்டு என வரையறுக்கபடும். உயிரற்றனவாகிய பௌதீக, இரசாயன அசேதனங்களுக்கும் (ABIOTIC) உயிர் வாழும் சேதனங்களின் (BIOTIC) பரிமாணங்களுக்கும் இடையிலான இடையீடுகளின் விளைவே இச்சூழல் நிலைமைகளாகும்.  இச்சூழல் இரண்டு வகைப்படும்.
01.    பௌதீக சூழல்/ இயற்கை சூழல்
02.    பண்பாட்டு சூழல்  /மனிதனால் உருவாக்கப்படும் சூழல்

Monday, April 2, 2012

மீண்டும் களத்தில் விடுதலைப் புலிகள்?

தமிழ்நாட்டில் மூன்று முகாம்களில் சிறப்பு ஆயுதப்பயிற்சி பெற்ற சுமார் 150 விடுதலைப் புலிகள் சிறிலங்காவுக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர்கள் வடக்கு, கிழக்கில் மறைந்திருந்து…
…சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவைகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஐலன்ட் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
“வடக்கு,கிழக்குப் பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகளைக் குழப்பி பிரச்சினைகளை உருவாக்குவதும், அழிவுகளை ஏற்படுத்துவதுமே இவர்களின் இலக்கு என்று சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
திருகோணமலை குச்சவெளியில் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று விடுதலைப் புலிகள் மூவர் கைது செய்யப்பட்டதை அடுத்து இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சந்தேகபநபர்கள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து தாம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக இவர்கள் கூறியுள்ளனர்.
சிறிலங்கா திரும்ப முன்னர் இவர்கள் தமிழ்நாட்டில் மூன்று இரகசிய முகாம்களில் ஆயுதப்பயிற்சிகளை பெற்றுள்ளனர்.
மீனவர்கள் போன்று வேடமிட்டுக் கொண்டு வடக்கு,கிழக்கில் இரகசிய நடவடிக்கைளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற பல கொலைகளின் பின்னணியில இவர்களே இருந்திருக்கலாம் என்று சிறிலங்கா புலனாய்வு சேவைகள் சந்தேகம் கொண்டுள்ளன.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இந்த மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட ஈபிடிபி உறுப்பினரின் சடலத்துக்கு அருகே, கிடந்த துண்டுக் காகிதம் ஒன்றில், “துரோகிகளுக்கு மரணம்: நாங்கள் மீண்டும் வந்துள்ளோம் – விடுதலைப் புலிகள்“ என்று எழுதப்பட்டிருந்ததாகவும் ஐலன்ட் நாளெடு செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை மற்றொரு கொழும்பு ஆங்கில நாளேடான ‘டெய்லி மிரர்‘, கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளான மூன்று சந்தேகநபர்களும் இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்களா என்று உறுதிப்படுத்துதவதற்காக விசாரணைகள் நடைபெறுவதாக தகவல் வெளியிட்டுள்ளது.
“சந்தேகநபர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்பதை இன்னமும் உறுதிப்படுத்த முடியவில்லை. அவ்வாறு தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்களை நாம் நிராகரிக்கவில்லை. விசாரணைகள் தொடர்கின்றன“ என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.
அத்துடன் குச்சவெளி பெரியகுளம் பகுதியில் கடந்த மார்ச் 18ம் நாள் கொலை செய்யப்பட்ட முத்து எனப்படும் ரகுநாதன் என்ற ஈபிடிபி உறுப்பினரின் சடலம் அருகே போடப்பட்டிருந்த “விடுதலைப் புலிகள்“ என்ற காகிதம், விசாரணையைத் திசை திருப்புவதற்காக போடப்பட்டிருக்கலாம் என்றே சிறிலங்கா காவல்துறையினர் ஆரம்பத்தில் சந்தேகித்திருந்தனர் என்றும் ‘டெய்லி மிரர்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
ஈபிடிபியில் கடந்த 15-20 ஆண்டுகளாக முன்னணி உறுப்பினராக இருந்த முத்து, விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலினால் சிலகாலம் மறைந்த வாழ்ந்துள்ளார்.
இவர் இராணுவப் புலனாய்வாளர்களுக்கு தகவல் வழங்குனராகவும் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, March 29, 2012

பாடசாலை செல்லாமல் இன்டெர் நெட் பார்த்த மகனுக்கு தகப்பனின் கொடூர தண்டனை

பொதுவாக நம்மூர்களில் தான் இப்படி கொடூரமான தண்டனைகளை வழங்கும் அப்பாக்கள் இருக்கிறார்கள்.
ஆனால் மேலை நாடுகளிலும் இவ்வாறு இருக்கின்றார்கள் என்பது தான் ஆச்சரியத்தைத் தருகின்றது.
தனது மகனின் கழுத்தில் சங்கிலியால் போட்டு பிணைத்து ஆமைப் பூட்டுப் போட்டு பூட்டி வைத்த தகப்பன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலைக்குச் செல்லாமல் கட் அடித்து விட்டு கொம்பியூட்டர் கேம் விளையாடிய தனது 13 வயதேயான மகனை சங்கிலியால் கட்டி வைத்து தண்டனை கொடுத்துள்ளார் குறித்த கோபக்காரத் தந்தை.
கம்போடியாவில் தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்த சிறுவனை அயலவர்கள் பொலிஸாரின் உதவியுடன் மீட்டனர்.
பொலிஸார் குறித்த சிறுவனின் கழுத்தில் இருந்த ஆமைப்பூட்டை உடைத்து சங்கிலிப் பிணைப்பை நீக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் பேச்சாளரான Cheth Vanny கருத்துத் தெரிவிக்கையில்,
பாடசாலைக்குச் செல்லாமல் இன்டர்நெட் கபேக்கு சென்றதைக் கண்ட தகப்பன் கடும் கோபமாகி விட்டார்.
பொதுமக்கள் முன்னிலையில் இவனுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று கருதிய தகப்பன் இவ்வாறு பூட்டுப் போட்டுப் பூட்டியுள்ளார்.
ஆனால் அதற்காக இப்படியான தண்டனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இவை சிறுவர் துஷ் பிரயோகத்துக்குள் உள்ளடங்குகின்றன.பொதுவாக நம்மூர்களில் தான் இப்படி கொடூரமான தண்டனைகளை வழங்கும் அப்பாக்கள் இருக்கிறார்கள்.

ஆனால் அதற்காக இப்படியான தண்டனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இவை சிறுவர் துஷ் பிரயோகத்துக்குள் உள்ளடங்குகின்றன.