Tuesday, January 3, 2012

உயர்தர பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதல் 10 இடத்திற்குள் தெரிவான முஸ்லிம் மாணவர்கள்

2011 ஆம் ஆண்டு  க.பொ.தா. உயர்தர பெறுபேறுகளுக்கமைய விஞ்ஞான,  கணித கலை, வர்த்தக, பிரிவுகளில் சிறப்பு சித்தி பெற்ற முதல் 10 பேரின் பட்டியலை பரீட்சைகள் திணைக்க ஆணையாளர் அநுர எதிரிசிங்க நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டார். இதன்படி உயிரியல் விஞ்ஞான பிரிவில் கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி எம்.எஸ். பாத்திமா ஹாலிதா மூன்றாவதாகவும், கணித பிரிவில் கொழும்பு தேர்ஸ்டர்ன் கல்லூரி மாணவன் எம்.ஆர்.எம். ஜவாத் சாலி 10 ஆவதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தக பிரிவில் கொழும்பு, டி. எஸ். சேனநாயக்க கல்லூரி மாணவன் எம். எஸ். எம். நுஸ்ரன் ஐந்தாவதாகவும், கலைப் பிரிவில் வவுனியா விபுலானந்தா வித்தியாலய மாணவன் பீர்முகம்மத் ஹிஷாம் 7 ஆவதாகவும் தெரிவாகியுள்ளனர்.
கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் அல்லாத வேறு துறைகளிலும் 10 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் கற்பிட்டி அல் அக்ஸா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி தாஜூதீன் பாத்திமா சப்னா 7 ஆவதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர மாவட்ட ரீதியில்அம்பாறை மாவட்டத்தில் உயிரியல்துறையில் 3 A பெற்று முதல் இடத்தை சம்மாந்துறையைச் சேர்ந்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மீராமுகைதீன் பாத்திமா சியாதா பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய மாணவி முகம்மது அனஸ் ஸீனா ஷிபா விஞ்ஞானப்பிரிவில் மூன்று பாடங்களிலும் A சித்தி பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தில் தெரிவாகியுள்ளார் , மாத்தளை மாவட்டத்தில் சாஹிரா கல்லூரி மாணவி பாத்திமா இல்மா விஞ்ஞானப்பிரிவில் மூன்று பாடங்களிலும் A சித்தி பெற்று மாவட்டத்தில் இரண்டாவது இடத்தில் தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment