இம்முறை உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் அடங்கிய கைநூலை இம்மாத இறுதியில் வெளியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.நாட்டிலுள்ள விற்பனைப் பிரதிநிதிகள் ஊடாக இந்தக் கைநூலை மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க கூறினார்.
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினை இந்த விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்வதற்குத் தடையாக அமையாது எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை இம்முறை உயர்த்துவதற்கு எண்ணியுள்ளதாகவும் காமினி சமரநாயக்க தெரிவித்தார்.
கடந்தமுறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 21 300 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment