அதை தொடர்ந்து புகுஷிமா அணு உலையை சுற்றி 20 கி.மீட்டர் தூரத்தில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கிருந்து வெளியேறிய கதிர் வீச்சு தாக்கத்தை அணுஉலை அதிகாரிகள் மிக படாதபாடுபட்டு கட்டுப்படுத்தினர்.எனவே அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த நிலையில், மீண்டும் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து கதிர் வீச்சு வெளியாகி உள்ளது. அங்குள்ள 2-வது அணுஉலையில் இருந்து வெளியான கழிவு நீரில் கதிர் வீச்சு பரவியுள்ளது.
அதன் அளவு மிகவும் அதிகமாக இருப்பதாகவும், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.