Saturday, January 14, 2012

பிரான்ஸின் கடன் தகுதி குறைவடைந்தது

பிரான்ஸ் உள்ளிட்ட 9 ஐரோப்பிய நாடுகளின் கடன் தகுதி மதிப்பீட்டை, ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ் (எஸ் அண்டு பி) நிறுவனம் குறைத்துள்ளது. இது, ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

தர நிர்ணய நிறுவனமான எஸ் அண்டு பி, கடந்த ஆண்டு, அமெரிக்காவின் கடன் தகுதி மதிப்பீட்டை ஒரு படி குறைத்தது. தற்போது, பிரான்ஸ் நாட்டின் கடன் தகுதி மதிப்பீட்டை 'ஏஏஏ' நிலையில் இருந்து ஒரு படி குறைத்து 'ஏ.ஏ.பிளஸ்' ஆக குறைத்துள்ளது. இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் ஜெர்மனி மட்டுமே 'ஏஏஏ' தரத்துடன் விளங்குகிறது. பிரான்ஸ் மட்டுமின்றி ஆஸ்திரியா, மால்டா, ஸ்லோவேக்கியா, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் தரக் குறியீடும் ஒரு படி குறைக்கப்பட்டுள்ளது. 

இவை தவிர, இத்தாலி,சைப்ரஸ், போர்ச்சுகல்,ஸ்பெயின் நாடுகளின் கடன் தகுதி குறியீடு இரண்டு படிகள் குறைக்கப்பட்டுள்ளன. எஸ் அண்டு பி-யின் இந்த நடவடிக்கைக்கு, பிரான்ஸ், இத்தாலி நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இம்மாத இறுதியில் நடைபெறும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டத்தில், நிதி நெருக்கடிக்கு முக்கிய தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment