வடகொரியாவில் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பயன்படுத்துபவர்களை, போர்க் குற்றவாளிகளாக அறிவித்து கடும் தண்டனை வழங்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில் வடகொரியாவும் பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக அணுஆயுத விஷயத்தில் சர்வதேச விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், வட கொரியாவின் சுப்ரீம் தலைவர் கிம் ஜாங் சமீபத்தில் காலமானார்.
அவருடைய மகன் கிம் ஜாங் யுன், நாட்டின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்நிலையில், பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குள் தகவல் தொடர்பு இருக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தகவல் பரிமாற்றத்தின் மூலம் நாட்டில் கலவரம் ஏற்படுமோ என்ற அச்சம் வடகொரிய தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இருந்து மக்களை தனிமைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், துனிசியா, லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் புரட்சி வெடித்ததால், வடகொரிய மக்களும் புரட்சியில் ஈடுபட்டு விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதை தடுக்கவே கிம்ஜாங் மறைவை யொட்டி அறிவிக்கப்பட்ட 100 நாள் துக்க காலம் முழுவதும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக டெய்லி டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரிய தலைவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்ப்பாளர்களும் உள்ளனர். கடும்
கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், தென் கொரியா அல்லது சீனாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், தென் கொரியா அல்லது சீனாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதுபோல் 23 ஆயிரத்துக்கும் அதிகமான வடகொரிய மக்கள், தென் கொரியாவுக்கு சென்றுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வடகொரியர்களுக்கு உதவிகள் கிடைப்பதை தடுக்கவும், அவர்கள் மற்ற நாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்கவுமே செல்போன் பயன்படுத்த அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு தடையை மீறி யாராவது செல்போனில் பேசுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்கள். அதன்படி கடும் தண்டனை வழங்கப்படும் என்று வடகொரிய அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment