இந்தியாவின் காஷ்மீரில் முன்னர் செயல்பட்டு வந்த ஹர்கத்துல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பதார் மன்சூர் தற்போது பாகிஸ்தானின் வஜிரிஸ்தான் மாகாணத்தில் வசித்து வந்தார்.
பாகிஸ்தானின் அல்கொய்தா தலைவராக செயல்பட்டு வந்த மன்சூர், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கு பயங்கரவாதிகளை விநியோகம் செய்து வந்தார். இதனால் அமெரிக்கா இவரை தேடி வந்தது.
இந்நிலையில் வாஜிரிஸ்தானில் உள்ள மிரான்ஷா பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் மன்சூர் உட்பட நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் கடந்த இரண்டு நாட்களாக ஆளில்லாத விமானங்கள் நடத்திய தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்
No comments:
Post a Comment