சோமாலியாவிற்கு மேலும் பத்தாயிரம் மெற்றிக் தொன் அரிசியை நிவாரணமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் அரிசியை அனுப்பி வைக்க உத்தேசித்துள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் உள்ள நெல்லினால் அரிசியை உற்பத்தி செய்து அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான களஞ்சியசாலைகளில் தற்போது ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மெற்றிக் தொன் நெல் கையிருப்பில் உள்ளதாக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன மேலும் குறிப்பிட்டார். 

No comments:
Post a Comment