பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைவாக அரசாங்கத்தினால் தொழில்களை வழங்க முடியாது என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். என்கோ 2012 கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே பிரதமர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
சுமார் இருபதாயிரம் மாணவர்கள் வருடாந்தம் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுவதாகவும் அதே அளவிலான மாணவர்களுக்கு தொழில்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமை இல்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அவர்களுக்கான ஜீவனோபாய தொழில் மார்க்கங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் கொடிகளை ஏந்தியவாறு தொழில் வழங்கக்கோரி வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்துவதற்கான சூழல் உருவாகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரசியல் துறையில் உள்ள பலர் தமது அதிகாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக அத்தகைய நபர்களை இணைத்துக்கொண்டு பேரணிகளை நடத்துவதற்கு முனைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment