Saturday, January 14, 2012

நாட்டில் பகலில் வெப்பம், இரவில் குளிர் காலநிலை நீடிக்கும் - வளிமண்டல திணைக்களம்

நாட்டின் சில பகுதிகளில் அண்மைக்காலமாக நிலவிவரும் கடும் வெப்பத்துடன் கூடிய வானிலை எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை வலுவிழந்துள்ளதன் காரணமாகவே பகல் வேளையில் கடும் வெப்பம் நிலவுவதாக திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் எம்.டி.தயானந்த தெரிவித்துள்ளார்.

தற்போது மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ள நிலையில் மேல், சப்ரகமுவ மத்திய மகாணங்களில் பகல் வேளையில் கடும் வெப்பம் நிவுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்தியாவை ஊடறுத்து வீசும் காற்று தற்போது நாட்டுக்குள் உள்வாங்கப்படுகின்றமையே வெப்பம் நிலவுவதற்கான காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வான் பரப்பில் முகில் கூட்டங்கள் குறைந்து  காணப்படுவதால் இரவு வேளையில் ஓரளவு குளிர் காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment