கடந்த 1980-ம் ஆண்டுகளில் இருந்து செல்போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செல்போன்களை அதிக அளவில் பேசுபவர்களுக்கு மூளை புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இதற்கிடையே சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, சுவீடன் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டனர். அதில் செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் அதில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சினால் மூளை புற்று நோய் ஏற்படாது. அதற்கான சாத்திய கூறுகள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் செல்போன் உபயோகிப்பாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment