Sunday, January 1, 2012

முஸ்லிம்நாய்களை யாழ்ப் பாணத்திற்கு விட்டது தவறு


யாழ்.மாநகர சபையின் 2011 ஆண்டுக்கான இறுதிக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை மாநகர முதல்வர்
திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் சட்டத்தரணி எம்.எம்.ரமீஸ் புலிகளினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படத் இழப்புகளை பற்றி பேசினார் அந்த உரையை இடைமறித்த புலிசார்பு உறுப்பினர்கள், இந்த உரை இனரீதியான பாகுபாட்டுடன் புலிகளை குற்றஞ்சாட்டுவதாக அமைந்துள்ளது என்று உரையை இடைமறித்து குழப்பினர் , இந்தப் பிரேரணையை எவரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் மு.றெமிடியஸ் கூச்சலிட்டார். எதிர்கட்சி உறுப்பினர் சங்கையா, இது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகம் எனக் குற்றம் சாட்டினார் ஆளும் தரப்பு உறுப்பினர் நிஷாந்தன், ‘இது ஜனநாயகப் பண்புகள் அற்ற ஈ.பி.டி.பி.யின்
அறிக்கை மாதிரி இருக்கிறது’ எனக் கூறி இந்த பிரேரணையை சபையில் கிளித்து எறிந்தார். இந்தச் செயற்பாட்டை அடுத்து சபை 30 நிமிடங்கள் குழப்பத்தில் மூழ்கியது அதன் போது மிகவும் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டது . புலிகள் கௌரமானவர்கள் அவர்களைக் குற்றம் சொல்வதற்கு இங்கு நாம் யாரையும் விடமாட்டோம் என சபையில் எதிரணி உறுப்பினர் விந்தன் தெரிவித்தார். விந்தன் முஸ்லிம் நாய்களை யாழ்ப்பாணத்திற்கு விட்டது தவறு. அரசின் எலும்புத் துண்டுக்காக சபையில் கௌரவமான புலிகளைப் பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு யாரடா
இவ்வளவு துணிவு தந்தது? என்று தெரிவித்துள்ளார். இதில் தலையிட்ட மாநாகர முதல்வர் ஜனநாயகப்
பண்புகயோடு நடந்து கொள்ளும் படி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர் நிஷாந்தன் ‘இந்த சபையில் உண்மையில் யார் முதல்வர்? யோகேஸ்வரியா, விஜயக்காந்தா? என கேள்வி எழுப்பியவுடன் சபையில் அமர்ந்திருந்த விஜயக்காந் ஆளும் உறுப்பினர் நிஷந்தனைத் தாக்கத் தொடங்கியதுடன் ஆளும் தரப்பிற்கிடையில் மோதல் வெடித்தது. 

No comments:

Post a Comment