சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு மத்தியஸ்தம் வகிக்குமாறு கோரி வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜர் குறித்து பல்வேறு கோணங்களில் சர்ச்சைகள் எழுந்துள்ளமை கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்களின் பெயர்களை ஒத்தவகையில் கணிசமான அளவு கையொப்பங்கள் இருப்பதனால், இந்த மகஜர் தொடர்பாகச் சந்தேகங்கள் எழுந்துள்ளன என்றும் கூறப்படுகின்றது.
நான்கு வாரங்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் சர்வதேச ரீதியில் 25 ஆயிரத்து 638 பேரிடம் கையொப்பம் திரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மகஜரில், மஹிந்த ராஜபக்ஷ என்ற பெயரில் ஐந்து பேரும், ஷிராந்தி ராஜபக்ஷ என்ற பெயரில் 5 பேரும், கோத்தபாய ராஜபக்ஷ என்ற பெயரில் இருவரும் கையொப் பமிட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது.
அத்துடன், பஸில் ராஜபக்ஷ என்ற பெயரில் இருவரும், நாமல் ராஜபக்ஷ என்ற பெயரில் இருவரும், யோஷித ராஜபக்ஷ என்ற பெயரில் இருவரும் கையொப் பமிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, யோஷித ராஜபக்ஷ, சசீந்ர ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகிய பெயர் களிலும் கையொப்பம் பதிவாகியுள்ளதுடன், விமல் வீரவன்ஸ மற்றும் மேர்வின் சில்வா ஆகிய பெயரில் இவ்விரண்டு கையொப்பங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மஹிந்த யாப்பா அபேவர்த்தன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மனுஷ நாணயக்கார, மஹிந்தானந்த அளுத்கமகே, சனத்ஜய சூரிய, அநுருத்த ரத்வத்தே, பிரட்றிகா ஜோன்ஸ், லக்ஷ்மன் ஹுலுகல்ல ஆகிய பெயர்களிலும் கையொப்பம் இடப்பட்டுள்ளன.
திலகரட்ன டில்ஷான், மஹேல ஜயவர்த்தன, ரொஷான் மஹாநாம, ரஞ்சன் மடுகல்ல, முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ், மாவன் அத்தபத்து, ஷாமர சில்வா, உபுல் தரங்க, ஷாமர கபுகெதர, திலின கண்டம்பி, அஞ்சலோ மத்தியூஸ் ஆகிய பெயர்களி லும் கையொப்பமிடப்பட்டுள்ளன. 

No comments:
Post a Comment