சர்வதேச குழு: குடும்பமும் பூகோளமயமாக்கலும் எனும் சர்வதேச மாநாடொன்று, தெஹ்ரானின் ஷஹீத் பெஹஸ்தி பல்கலைக்கழகத்தில் மே 12 மற்றும் 13ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இஸ்லாமிய கலாசார மற்றும் உறவுகளுக்கான அமைப்பு மற்றும் இஸ்லாமிய காங்கிரஸ் அமைப்பு என்பவற்றின் ஒத்துழைப்புடன் பல்கலைக்கழகம் இந்நிகழ்ச்சியை நடத்துகின்றது.
இம்மாநாட்டுக்கான ஆய்வுச் சுருக்கங்களை அனுப்புவதற்கான இறுதித்திகதி பெப்ரவரி 22ம் திகதியாகிய நாளையாகும்.
'குடும்பங்களின் கட்டமைப்பு மற்றும் நடைமுறையில் பூகோளமயமாக்கலின் செல்வாக்கு', 'குடும்பக் கற்கைகளில் பூகோளமயமாக்கலின் செல்வாக்கு', 'குடும்பத்தில் பூகோள குற்றச் செயல்களின் செல்வாக்கு', 'குடும்பங்களில் சர்வதேச ஊடகங்களின் செல்வாக்கு', 'ஏனைய சமூக நிறுவனங்களுடனான குடும்ப உறவுகளில் பூகோளமயமாக்கலின் செல்வாக்கு' என்பன இந்நிகழ்ச்சியின் பிரதான கருப்பொருள்களாகும்.
'குடும்பக் கொள்கை வகுப்பில் பூகோளமயமாக்கலின் தாக்கம்', 'பூகோளமயமாக்கலும் குடும்பக் கல்வியும்', 'பூகோளமயமாக்கல் காலத்தில் குடும்பத்தில் குடிவரவின் விளைவுகள்', 'குடும்பத்தில் பூகோளமயமாக்கலின் சட்ட ஒழுங்குகள்' மற்றும் 'குடும்பப் பொருளாதாரத்தில் பூகோளமயமாக்கலின் பங்கு' போன்ற கருப்பொருள்களிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழுள்ள இணைய முகவரிக்குச் சென்று தமது பெயர்களைப் பதிவு செய்து கொள்வதுடன், 1000 சொற்களுக்கு அண்ணளவான தமது ஆய்வுச் சுருக்கங்களையும் அனுப்பி வைக்க வேண்டும்
No comments:
Post a Comment