யாழ்ப்பாணத்தில் குப்பிவிளக்கை வைத்துப் படித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் தீப்பிடித்து எரிந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் புகையிரத வீதியைச் சேர்ந்த சுன்னாகம் மயிலானை மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சந்திரசேகரம் சுஜித்தா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு இம்மாணவி குப்பிவிளக்கை வைத்துப் படித்துக்கொண்டிருந்தபோது அவரது ஆடையில் திடீரென தீப்பிடித்த நிலையில் இம்மாணவி தீயில் எரிந்துள்ளார். உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இம்மாணவி இன்று காலை உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது மரணம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment