Thursday, March 22, 2012

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு 24 நாடுகள் ஆதரவாகவும் 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன


ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக 15 நாடுகளும் ஆதரவாக 24 நாடுகளும் வாக்களித்துள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைபேரவையில் அங்கம் வகிக்கும் 47  நாடுகளில் 39 நாடுகள் வாக்களித்திருந்ததோடு 8 நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகி கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
இதன்படி, சீனா, ரஷ்யா, கியுபா, இந்தோனேசியா, தாய்லாந்து, செக் குடியரசு, ஈக்குவாடோர். கிரிக்கிஸ்தான், மாலைத்தீவு ஆகிய நாடுகள் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு அதரவாகவும் இந்திய உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சில அமெரிக்காவிற்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தன.
 
இதன்படி இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகளும் எதிராக 24 நாடுகளும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்: பங்களாதேஷ், சீனா, கொங்கோ, கியூபா, ஈக்குவாடோர், இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, மைவுரிடானியா, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா.
 
இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்: அவுஸ்ரேலியா, பெல்ஜியம், பெனின், கெமரூன், சிலி, கொஸ்டரீக்கா, செக் குடியரசு, கோத்தமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி, லிபியா, மொரிடஸ், மெக்சிகோ, நைஜீரியா, நோர்வே, பெரு, போலாந்து, மோல்டோவா, ரோமானியா, ஸ்பெயின், சுவிர்ஸர்லாந்து, ஜக்கிய அமெரிக்கா, உருகுவே.
 
வாக்களிக்காத நாடுகள்: அங்கோலா, போர்சுவானா, பேர்கினா பசோ, ஜிபூடி, ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா, செனகல்.  
      

அமெரிக்கா செய்த யுத்தகுற்றங்களுக்கு யார் தண்டனை வழங்குவது??????? 

No comments:

Post a Comment