கச்சத்தீவு: கச்சத்தீவில் சீனாவின் உதவியுடன் இலங்கை அரசு நிரந்தர கடற்படைத் தளம் ஒன்றை அமைத்துள்ளது தமிழக மீனவர்களை கடும் அதிரிச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து 13 மைல் தொலைவில் கச்சச்த் தீவு உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு மன்பு இந்த தீவு இந்தியாவுக்கு சொந்தமானதாக இருந்தது. கடந்த 1974ம் ஆண்டு மத்திய அரசு இத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. இனால் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இதனால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுவடைந்து வருகிறது.
கடந்த 2009ம் ஆண்டு கச்சத்தீவில் கடற்படை தளம் அமைக்க இலங்கை முயன்றது. ஆனால் அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அந்த முயற்சியை இலங்கை கைவிட்டது.
இந்த நிலையில் கச்சத்தீவில் சீனாவின் உதவியுடன் இலங்கை அரசு நிரந்தர கடற்படைத் தளத்தை அமைத்து அங்கு 2 போர்க்கப்பல்களையும் நிறுத்தி வைத்துள்ளது.
இலங்கை அரசின் இந்த திடீர் நடவடிக்கை தமிழக அரசுக்கும், மீனவர்களுக்கும் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment